உள்நாடு

எரிவாயு விலை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

மாதாந்த எரிவாயு விலைத் திருத்தத்தின் பிரகாரம் இம்முறையும் லிட்ரோ எரிவாயுவின் விலையில் எவ்வித திருத்தமும் இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை லிட்ரோ எரிவாயு நிறுவனத் தலைவர் முதித பீரிஸ் (Muditha Peiris) ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளார்.

கடைசியாக ஜூலை இரண்டாம் திகதி எரிவாயு விலை திருத்தம் செய்யப்பட்டது.

இதையடுத்து, ஒகஸ்ட் மாதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இதனடிப்படையில், 12.5 கிலோ லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை ரூபா 3690 ஆகவும், ஐந்து கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை ரூபா 1482 மற்றும் 2.3 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை ரூபா 694 ஆகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *