நாட்டில் 40 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
கடந்த மூன்று வருடங்களில் வாரத்திற்கு 40 மணித்தியாலங்களுக்கு மேல் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை 700,000 ஆக அதிகரித்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
நாட்டின் தொழிலாளர்களில் 4095493 பேர் அதாவது 7999993 பேர் 40 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
வாரத்திற்கு 40 மணிநேரம், அதற்கு மேல் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டில் 56.2 சதவீதமாக இருந்ததாகவும், இந்த ஆண்டு அது 17 சதவீதம் அதிகரித்து 65.8 சதவீதமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
மேலும், பொருளாதார பணவீக்கம் போன்றவற்றால் வாரத்திற்கு வேலை நேரம் நாற்பதாக அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.