சமையல் எரிவாயு விலையில் மாற்றமா?
சமையல் எரிவாயு விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படாது என லாப் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி நிரோஷன் ஜே பீரிஸ் இன்று புதன்கிழமை (04) தெரிவித்துள்ளார்.
தற்போது, லாப் சமையல் எரிவாயு 12.5 கிலோ சிலிண்டர் 3,680 ரூபாவுக்கும், 05 கிலோ சிலிண்டர் 1,477 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) செப்டம்பர் மாதத்துக்கான லிட்ரோ எரிவாயுவின் விலையில் திருத்தம் செய்யப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் அறிவித்துள்ளார்.