முதல் நாள் தபால்மூல வாக்களிப்பு நிறைவு.
எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின் முதல் நாள் நடவடிக்கைகள் நிறைவடைந்தன.
தபால் மூல வாக்களிப்பு நாளை மற்றும் நாளை மறுதினம் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
04ஆம், 05 ஆம் மற்றும் 06 ஆம் திகதிகளில் வாக்களிக்க தவறியவர்களுக்கு எதிர்வரும் 11 மற்றும் 12 ஆம் திகதி வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.