50 இலட்சம் புதிய கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்ய நடவடிக்கை!
எதிர்வரும் 15 ஆம் திகதியளவில் புதிய பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கிய கடவுச்சீட்டுகள் நாட்டுக்குக் கிடைக்குமென குடிவரவு – குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
50,000,00 புதிய கடவுச்சீட்டுகளைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 15 ஆம் திகதியளவில் அதன் முதல் தொகுதியாக 50,000 கடவுச்சீட்டுகள் நாட்டுக்குக் கிடைக்குமென குடிவரவு – குடியகல்வு திணைக்களம் கூறியுள்ளது.
அவை கிடைத்தவுடன் தற்போது கடவுச்சீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு கிட்டுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதுவரை நாளாந்தம் வழங்கப்படும் கடவுச்சீட்டுகளை 1000 ஆக மட்டுப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் கூறியுள்ளது.
தற்போது தம்வசம் 30,000 கடவுச்சீட்டுகள் கையிருப்பில் உள்ளதாக குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இந்த நாட்களில் குடிவரவு – குடியகல்வு திணைக்கள அலுவலகத்தை அண்மித்து கடவுச்சீட்டை பெறுவதற்காக நீண்ட வரிசைகள் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.