குரங்கம்மை தடுப்பூசி – முதல் தொகுதி கொங்கோ குடியரசிற்கு.
ஒரு இலட்சம் குரங்கம்மை தடுப்பூசிகள் முதல் தொகுதி கொங்கோ இராச்சியத்தை சென்றடையுமென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோவில் குரங்கம்மை தாக்கம் அவதான நிலையை ஏற்படுத்தியுள்ளதாக அண்மையில் உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்தது.
இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நன்கொடையில் Bavarian Nordic நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட குரங்கம்மை தடுப்பூசிகள் கொங்கோவிற்கு இன்று கிடைக்கப்பெறுமென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த வாரத்தில் மொத்தம் 200,000 தடுப்பூசிகள் நாட்டைச் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிரிக்க கண்டத்தில் mpox நோய்த்தொற்று 13 நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டது.