விளையாட்டு

10 ஓவர் 10 ரன் 10 விக்கெட்; வெறும் 5 பந்தில் முடிந்த ரி20 கிரிக்கெட் போட்டி.

ரி20 கிரிக்கெட் உலகக்கிண்ணத் தகுதிச் சுற்று போட்டியில் மோசமான சாதனையை மொங்கோலியா அணி படைத்துள்ளது.

10ஆவது ரி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் 2026ஆம் ஆண்டு பெப்ரவரி முதல் மார்ச் வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் தொடருக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில், சிங்கப்பூர் மற்றும் மங்கோலியா அணிகளுக்கு இடையிலான ரி20 உலகக்கிண்ணத் தகுதிச் சுற்றுப் போட்டி, மலேசியாவில் உள்ள யு.கே.எம்., – ஒய்.எஸ்.டி., ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில், நாணயசுழற்சியில் வென்ற சிங்கப்பூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, துடுப்பாட்டத்தை தேர்வு செய்த மொங்கோலியா வீரர்கள், சிங்கப்பூரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். 10 ஓவர்கள் மட்டுமே தாக்கு பிடித்த அந்த அணி 10 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக, கன்போல்டு, சுரேன்ட்செட்செக் தலா 2 ரன்களை மட்டுமே அடித்தனர். இதன்மூலம், டி20 கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த ரன்னுக்கு சுருண்ட அணி என்ற சாதனையை மங்கோலியா படைத்துள்ளது.

சிங்கப்பூர் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய பரத்வாஜ் 4 ஓவர்களை 3 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

இதைத் தொடர்ந்து, விளையாடிய மொங்கோலியா வெறும் 5 பந்துகளிலேயே ஒரு விக்கெட் இழப்பிற்கு 13 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம், அதிக பந்துகளை (115 பந்துகள்) மீதம் வைத்து வெற்றி பெற்ற அணி என்ற பெருமையை சிங்கப்பூர் அணி பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *