அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் – இந்தியர்களின் வாக்கு யாருக்கு?
அமெரிக்காவில் நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்தியர்களின் வாக்கு யாருக்கு என்ற கேள்வி எழும்பியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹரிஸும் குடியரசு கட்சி சார்பில் டொனல்ட் டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர்.
தேர்தலுக்காக இருவரும் மாறி மாறி பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன நிலையில் அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாக்கு யாருக்கு மொத்தமாக கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கமலா ஹரிஸ் இந்திய வம்சாவளி என்பதால் இவருக்கே வாக்களிக்க வேண்டும் என சில இந்திய அமைப்பினர் குரல் எழுப்ப துவங்கி உள்ளனர்.
பல இந்தியர்கள் மற்றும் ஹிந்து அமைப்புகளும், அமெரிக்க தேர்தலுக்கு சில அமைப்புகள் பெரும்பாலும் கமலா ஹரிஸுக்கே ஆதரவளிக்கவுள்ளனர்.
கமலா ஹரிஸ் ஜனாதிபதியால் இந்திய – அமெரிக்க உறவு மேம்படும் என பேசப்படுகிறது.
இதனால் இந்தியர்கள் கமலாவுக்கே வாக்களிக்க வேண்டும் என்று குரலெழுப்பி வருகின்றனர்.