வாக்குச் சீட்டுகளை விநியோகித்தவரை தாக்கியவர் கைது.
களுத்துறை தெற்கு தபால் நிலையத்தில் வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் போது தபால்காரரை தாக்கிய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
களுத்துறை ஜாவத்த பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தபால்காரரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.