டெஸ்ட் கிரிக்கெட்டில் எனது சாதனையை முறியடிப்பதற்கான சாத்தியம் இல்லை! முத்தையா முரளிதரன்
டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது சாதனையை முறியடிப்பதற்கான சாத்தியம் இல்லை முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் (Muttiah Muralitharan) தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “ டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து கவலையாக உள்ளது.
குறுகிய வடிவ கிரிக்கெட் போட்டிகளுக்கே தற்போது அதிகளவில் முக்கியத்துவம் வழங்குகின்றனர்.
பல நாடுகளில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்குக் குறைந்த எண்ணிக்கையிலான ரசிகர்களே மைதானத்திற்கு வருகின்றனர்.
நான் 20 வருடங்கள் கிரிக்கெட் விளையாடிய நிலையில், அந்த சாதனையைப் பதிவு செய்தேன் ஆனால் தற்போது பல வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை குறைந்த காலத்திற்கே உள்ளது.
எனவே டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 800 விக்கெட்டுக்களை வீழ்த்திய தமது சாதனையை, வேறு வீரர் ஒருவர் மிக குறுகிய காலப்பகுதியில் முறியடிப்பதற்கான சந்தர்ப்பம் இல்லை” என்றார்.