இன்று முதல் விசேட போக்குவரத்து சேவை.
நீண்ட வார இறுதி விடுமுறைக்காக சொந்த இடங்களுக்கு செல்வோருக்காக இன்று முதல் விசேட போக்குவரத்து சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலதிகமாக சுமார் 60 பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
நேர அட்டவணையின்றி மேலதிக பஸ் சேவைகளை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கூறியுள்ளது.