யாழ். கொழும்பு தொடருந்து சேவை – வெளியான முக்கிய அறிவிப்பு!
வடக்கிற்கான மாஹேவில் இருந்து அநுராதபுரம் (Anuradhapura) வரையான தொடருந்து பாதையில் நேற்று (12) நடைபெற்ற பரீட்சார்த்த பயணம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொடருந்து பாதையில் வேலைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை என திட்டத்திற்கு பொறுப்பான அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து தொடருந்து பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை திட்டத்திற்குப் பொறுப்பான அதிகாரிகள் தொடருந்து திணைக்களத்திற்கு அறிவித்துள்ளனர்.
யானைகள் சுரங்கப்பாதை மற்றும் மாஹோவுக்கும் அனுராதபுரத்துக்கும் இடையிலான ஆறு புகையிரத நிலையங்களின் புனரமைப்புப் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என திட்டத்திற்குப் பொறுப்பான அதிகாரிகள் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளனர்.
அத்துடன் மாஹோவிற்கும் அனுராதபுரத்திற்கும் இடையிலான வண்ண சமிக்ஞை அமைப்பு இன்னும் நிறுவப்படவில்லை என்றும், இந்த குறைபாடுகளைக் கருத்தில் கொண்டு தொடருந்துகளின் இயக்கம் பாதுகாப்பற்றதாக இருக்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே குறித்த காரணங்களை கருத்தில் கொண்டு தொடருந்து பயணம் காலவரையின்றி நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.