அடுத்த வருடம் முதல் அனைத்து பரீட்சைகளும் தாமதமின்றி நடைபெறும்!
அடுத்த வருடம் முதல் அனைத்து பரீட்சைகளும் தாமதமின்றி நடைபெறும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடம் ஜனவரி 2 ஆம் திகதி பாடசாலை தவணை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், மூன்றாவது தவணை இரண்டு வாரங்களுக்கு நடத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அதன்படி, ஜனவரி 20ஆம் திகதி முதல் தவணை ஆரம்பமாக உள்ளது.
சீருடை, பாடப்புத்தகம் என அனைத்தும் இப்போதே தயாராகிவிட்டன என்று உத்தரவாதம் தரலாம்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் 25ஆம் திகதி ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
கல்விப் பொதுத் தராதர பரீட்சை பெறுபேறுகளும் இன்னும் இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்