லெபனானில் மீண்டும் தொலைத்தொடர்பு சாதனங்கள் வெடித்துசிதறின – 20 பேர் பலி
லெபனானில் மீண்டும் தொலைத்தொடர்பு சாதனங்கள் வெடித்ததில் 20 பேர் உயிரிழந்துள்ளதுடன் 450 பேர் காயமடைந்துள்ளனர்.
ஹெஸ்புல்லா அமைப்பின் உறுப்பினர்களின் வோக்கிடோக்கிகள் வெடித்து சிதறியதால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
பேஜர்கள் வெடித்துச்சிதறியதில் உயிரிழந்தவர்களின் இறுதிநிகழ்வுகளின் போது ஹெஸ்புல்லா அமைப்பின் உறுப்பினர்களின் தொலைத்தொடர்பு சாதனங்கள் வெடித்துள்ளன.
பெய்ரூட்டின் தென்பகுதியில் உள்ள டகியேவில் இறுதி நிகழ்வில் ஹெஸ்புல்லா உறுப்பினர்கள் உட்பட மக்கள் கலந்துகொண்டிருந்தவேளை வெடிப்புசம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
நபர் ஒருவர் நிலத்தில் விழுந்து கிடப்பதையும் மக்கள் அங்கிருந்து அலறியடித்துக்கொண்டு ஓடுவதையும் காண்பிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
இதன் பின்னர் அந்த வீதிகளில் வெடிப்புசத்தங்கள் கேட்டுள்ளன,