உள்நாடு

500 ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள் திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதி!

பொலன்னறுவை , பக்கமூன பிரதேசத்தில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் 500 பணியாளர்கள் திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பக்கமூன பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (19) காலை இடம்பெற்றுள்ளது.

சுகயீனமுற்ற பணியாளர்கள் பக்கமூன பிரதேச வைத்தியசாலையிலும் அத்தனகடவல வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த பணியாளர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக இவ்வாறு சுகயீனமுற்றுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சுகயீனமுற்றுள்ள பணியாளர்களில் உடல் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *