பாடசாலைக்கு சென்ற இரு சிறுமிகள் மாயம்: பொலிஸார் விசாரணை
மொனராகலை பிரதேசத்தில் உள்ள சிறுவர் காப்பகம் ஒன்றிலிருந்த இரண்டு சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
14 மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுமிகளே இவ்வாறு காணாமல்போயுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இந்த சிறுமிகள் இருவரும் நேற்று வியாழக்கிழமை (19) காலை பாடசாலைக்கு சென்றுள்ள நிலையில் மீண்டும் சிறுவர் காப்பகத்திற்கு திரும்பவில்லை என பொலிஸருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொனராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.