அசெளகரியம் ஏற்படாத வகையில் வெற்றியைக் கொண்டாடுமாறு பொலிஸார் வேண்டுகோள்
மற்றவர்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் தேர்தல் வெற்றிகளை கொண்டாடுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் தேர்தல் தொடர்பான சம்பவங்கள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என பிரதிப் பொலிஸ் மா அதிபரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான சட்டத்தரணி நிஹால் தல்துவ இன்று (22) ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.