உலகம்உள்நாடு

இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரவிற்கு சீன ஜனாதிபதி வாழ்த்து

இலங்கையின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அநுர குமார திஸாநாயக்கவிற்கு, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

சீன ஜனாதிபதி தனது வாழ்த்து அறிக்கையில், “சீன அரசாங்கத்தின் சார்பிலும், மக்களின் சார்பிலும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். இலங்கையும் சீனாவும், பாரம்பரிய நட்பு அயல் நாடுகள். இரு நாடுகளும் இராஜ தந்திர உறவுகளை ஏற்படுத்தி 67 வருடங்களாகின்ற நிலையில், இரு நாடுகளும் பரஸ்பரம் மற்றும் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வையும்,ஆதரவையும் வழங்கி வருகின்றன.

இதன் மூலம், இரு நாடுகளும் நட்புறவுமிக்க, சகவாழ்வு மற்றும் வேவ்வேறு அளவிலான நாடுகளிடையிலான பரஸ்பரம் நன்மையளிக்கக் கூடிய ஒத்துழைப்பு ஆகியவற்றிற்கான சிறந்த உதாரணங்களாகும்.

நான், இலங்கை – சீன உறவுகளுக்கு பெரும் முக்கியத்துவத்தை வழங்குகின்றேன். உங்களுடன் பாரம்பரிய நட்புறவை முன்னெடுப்பதற்கும், பரஸ்பர அரசியல் நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கும் புதிய நட்புறவுப்பாதைத் திட்டத்தில் வெற்றிகரமான விடயங்களைச் சாதிப்பதற்கும் நான் ஆர்வமாக உள்ளேன்” என்று, மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *