அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார் ரணில்
முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க.) தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடமாட்டார் என அறிவித்துள்ளார். அவருடைய முடிவின்படி, அவர் மீண்டும் பாராளுமன்ற ஆசனத்தை நாடமாட்டார் எனவும், இதற்குப் பதிலாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஆலோசகராக செயற்படுவார் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பிற எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து ஒரு மாபெரும் கூட்டணியை உருவாக்கவுள்ளதாக தெரிவித்தார். இந்த புதிய கூட்டணியின் மூலம், எதிர்க்கட்சிகள் ஒரே மேடையில் கூடி அரசியலில் புதிய மாற்றத்தை உருவாக்க விரும்புகின்றன.