பொதுத் தேர்தலுக்கு 11 பில்லியன் ரூபாய் தேவை-தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்காக 11 பில்லியன் ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் அரசியலமைப்பின்படி, பாராளுமன்றத் தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடு திறைசேரியில் இருந்து ஜனாதிபதியினால் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.