அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியை தாக்கிய ஹெலன் சூறாவளி – 43 பேர் பலி
அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியை வெள்ளிக்கிழமை ஹெலீன் சூறாவளி தாக்கியதில் குறைந்தது 43 பேர் உயழிரிழந்துள்ளதோடு, இலட்சக்கணக்கானவர்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
புளோரிடா வளை குடாவை தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளி இதுவாகும்.
சூறாவளியால் வியாழக்கிழமை இரவு பெய்த மழையினை அடுத்து மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
அதனை அடுத்து ஜோர்ஜியா மற்றும் கரோலினாஸுக்கு வடக்கே சூறாவளி கரையை கடந்துள்ளது.
இந்நிலையில், ஹெலன் சூறாவளி வலுவிழந்திருந்தாலும் அதிக காற்று, வெள்ளம் மற்றும் சூறாவளி அச்சுறுத்தல் தொடரும் என்று முன்னறிவிப்பாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இன்னும் சில இடங்களில் 50 சென்றி மீட்டர் வரை அதி பலத்த மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவை தாக்கிய சூறாவளிகளில் 14 ஆவது சக்தி வாய்ந்த சூறாவளியாக இது பதிவாகியுள்ளது.
இந்த சூறாவளியிால் மணிக்கு 675 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசியுள்ளது.
2017 ஆம் ஆண்டு ஐடா மற்றும் 1996 ஆம் ஆண்டு ஓபல் ஆகிய சூறாவளிகள் 460 மைல்கள் காற்று வீசியுள்ளது.
புளோரிடா, ஜோர்ஜியா, டென்னசி மற்றும் கரோலினாஸ் முழுவதும் பலத்த காற்று மற்றும் பலத்த மழையின் தாக்கம் பரவலாக உள்ளது.
புளோரிடாவில் பினெல்லாஸ் கவுண்டியில் ஐந்து பேர் உட்பட எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.