நீர்கொழும்பில் 5 கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது
நீர்கொழும்பு பிரதேசத்தில் 5 கஜமுத்துக்களை விற்பனை செய்ய தயாராக இருந்த சந்தேக நபர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று வெள்ளிக்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கெலிஓயா பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் ஆவார்.
இந்த கஜமுத்துக்களின் மொத்த பெறுமதி சுமார் ஒரு கோடியே இருபது இலட்சம் ரூபா என பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.