அம்பலாங்கொடையில் அரியவகை இளஞ்சிவப்பு நிற நாகப்பாம்பு கண்டுபிடிப்பு
அம்பலாங்கொடை, வத்துகெதர , ஆதாதொல பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் முற்றத்திலிருந்து அரியவகை இளஞ்சிவப்பு நிற நாகப்பாம்பு ஒன்று பிரதேசவாசிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த இளஞ்சிவப்பு நிற நாகப்பாம்பானது 18 அடி நீளமுடையது ஆகும்.
இந்த நாகப்பாம்பு தெஹிவளை மிருகக்காட்சி சாலையின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தெஹிவளை மிருகக்காட்சி சாலையின் அதிகாரிகள் இது தொடர்பில் தெரிவிக்கையில், இந்த அரியவகை இளஞ்சிவப்பு நிற நாகமானது நாட்டில் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.
பல ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் இவ்வாறான அரியவகை நாகப்பாம்புகள் பிறக்கும்.எனவே, இதனை வனப்பகுதியில் விட்டுவிடாமல் பாதுகாப்பாக தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் வைத்திருப்பது அவசியமாகும்.
ஏனெனில், வனப்பகுதியில் உள்ள ஏனைய மிருகங்கள் இந்த அரியவகை நாகப்பாம்பை வேட்டையாடுவதற்கு வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.