சேவாக்கை முந்திய ஜெய்ஸ்வால்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு போட்டியின் 2 இன்னிங்ஸிலும் 100க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் 50க்கும் மேற்பட்ட ஓட்டங்களை அடித்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.
அவரைத் தவிர்த்து இதற்கு முன் கடந்த 2011ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற மேற்கு இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஜாம்பவான் சேவாக் 55 (46), 55 (55) ஓட்டங்கள் அடித்தார்.
அப்போட்டியில் 2வது இன்னிங்ஸில் சேவாக் 55 பந்துகளில் 55 ஓடங்கள் மிகச்சரியாக 100.00 ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்திருந்தார்.
ஆனால் ஜெய்ஸ்வால் மட்டுமே ஒரு போட்டியின் 2 இன்னிங்ஸிலும் 100க்கும் மேற்பட்ட (141.18, 113.33) ஸ்ட்ரைக் ரேட்டில் 50க்கும் மேற்பட்டஓட்டங்களை (71, 51) அடித்து மற்ற இந்திய வீரர்கள் செய்யாத தனித்துவமான சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
மேலும் இப்போட்டியில் அடித்த 123 ஓட்டங்களையும் சேர்த்து ஜெய்ஸ்வால் இந்த வருடம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 972 ஓட்டங்கள் அடித்துள்ளார்.
இரண்டாவது டெஸ்ட்டின் ஆட்டநாயகன் விருது அவருக்கு வழங்கப்படது.