லெபனான், சிரியாவுக்கு செல்வதை தவிர்க்கவும்
நெருக்கடியான நிலைமை நிறைவடையும் வரை லெபனான் மற்றும் சிரியா நாடுகளுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு அரசாங்கத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அதேபோன்று அந்த நாடுகளில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களை பாதுகாப்புடன் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதற்கான பணிப்புரைகளை அங்குள்ள தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகராலய அதிகாரிகளுக்கு விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதற்கமைய அங்கு மதவழிப்பாட்டுத்தலங்கள் மற்றும் தூதுவராலயத்தின் ஒரு பகுதியிலும் இலங்கையர்கள் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நெருக்கடி நிலையை கவனத்திற் கொண்டு தமது பாதுகாப்பைக் கருதி அந்த நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என்பதை நாம் வலியுறுத்துகின்றோம்.
நிலைமை முற்றாக சீரடைந்ததும் அதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.