காணி விற்ற பணம் யாழ்ப்பாணத்தில் கொள்ளை.
வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவர் யாழில் உள்ள தனது காணியை விற்றுவிட்டு அந்தப் பணத்தினை எடுத்துச் சென்றவேளை, அவரிடம் இருந்து கொள்ளையர்கள் அந்த பணத்தினை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் 7 மணி அளவில்மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்குவேலி பகுதியில் இடம்பெற்றது.
குறித்த சங்குவேலி பகுதியில் உள்ள தனது காணியை விற்பனை செய்துவிட்டு 1 கோடி 8 இலட்சம் ரூபாவினை எடுத்துச் சென்றவேளை இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
பணத்தினை கொள்ளையடித்தவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மானிப்பாய் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.