விளையாட்டு

மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணம் இன்று

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ( ஐ.சி.சி.) மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ண போட்டியை 2009-ம் ஆண்டு அறிமுகம் செய்தது.

இங்கிலாந்தில் நடந்த இந்த போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது. கடைசியாக கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 8 இருபது ஓவர் உலகக் கிண்ண போட்டிகள் நடை பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியா அதிகபட்சமாக 6 தடவை (2010, 2012, 2014, 2018, 2020, 2023) உலகக் கிண்ணத்தினை வென்றுள்ளது. இங்கிலாந்து (2009), வெஸ்ட் இண்டீஸ் (2016) அணிகள் தலா ஒரு முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி உள்ளன.

9-வது மகளிர் 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் இன்று(வியாழக்கிழமை) தொடங்குகிறது. எதிர்வரும் 20ந் திகதி வரை துபாய், ஷார்ஜாவில் போட்டிகள் நடைபெறுகிறது.

பங்களாதேஷில் நடைபெற இருந்த போட்டி அங்கு ஏற்பட்ட அரசியல் சூழல் காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு மாற்றப்பட்டது.

20 ஓவர் உலகக் கிண்ணத்தில் 10 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 2 பிரிக்கப் படுள்ளன.

அதன் விவரம்:

ஏ பிரிவு : நடப்பு சாம்பி யன் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை.

பி பிரிவு: இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், பங்களாதேஷ், ஸ்காட்லாந்து.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும் ‘லீக்’ முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும் 15ம் திகதியுடன் லீக் ஆட்டங்கள் முடிகிறது.

முதல் அரை இறுதி அக்டோபர் 17ம் திகதியும், 2வது அரை இறுதி 18ம் திகதியும், இறுதிப்போட்டி அக்டோபர் 20ம் திகதியும் நடக்கிறது. மொத்தம் 23 ஆட்டங்கள் நடக்கிறது.

இன்று நடைபெறும் தொடக்க ஆட்டங்களில் பங்களாதேஷ் மற்றும் ஸ்காட்லாந்து அணிகளும் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளும் மோதுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *