இம்மாத Laugfs எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை .
மாதாந்த விலைத் திருத்தத்திற்கமைய, Laugfs சமையல் எரிவாயு விலைகளில் மாற்றம் மேற்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், எரிபொருள் விலைச்சூத்திரத்திற்கு அமைய, இம்மாதமும் (ஒக்டோபர்) எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்படாது என, Laugfs நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி நிரோஷன் ஜே பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தற்போது, Laugfs சமையல் எரிவாயு12.5kg: ரூ. 3,680 இற்கும்,5kg: ரூ. 1,477 இற்கும் விற்பனை செய்யப்படுகின்றது.