பொதுத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஆரம்பம்.
ஆரம்பமாகவுள்ளதுஎதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்கள் இன்று தொடக்கம் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய முடியும்.
வேட்பு மனுக்கள் ஏற்கும் பணி ஒக்டோபர் 11 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகங்களில் நடைபெறும்.
தேர்தலில் போட்டியிடுவதற்காக 86 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 11 ஆம் நண்பகல் 12.00 மணிக்குப் பிறகு, வேட்புமனுத்தாக்கல் மற்றும் அனைத்து குழுக்களுக்கும் ஆட்சேபனை தெரிவிக்க ஒரு மணி நேரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதுபொதுத் தேர்தல் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், புதிய நாடாளுமன்றம் நவம்பர் 21 ஆம் திகதி கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.