விளையாட்டு

முதல் போட்டியிலேயே இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்.

ஐசிசி மகளிர் T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 31 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

சார்ஜா மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 116 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பில் அணியின் தலைவி Fatima Sana 30 ஓட்டங்களை பெற்றதுடன், Nida Dar 23 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Udeshika Prabodhani, Sugandika Kumari மற்றும் Chamari Athapaththu ஆகியோர் தலா 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

பின்னர் 117 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 85 ஓட்டங்களை மாத்திரம் பெற்ற நிலையில் தோல்வியடைந்தது.

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Nilakshika Silva அதிகபட்சமாக 22 ஓட்டங்களை பெற்றதுடன், Vishmi Gunaratne 20 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் Sadia Iqbal 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *