இலங்கைக்கு எதிரான மேற்கிந்தியத் தீவுகள் குழாம் அறிவிப்பு.
இலங்கை அணிக்கு எதிரான இருபதுக்கு 20 மற்றும் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டித் தொடர்களுக்கான மேற்கிந்தியத் தீவுகள் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்குச் சுற்றுலா மேற்கொள்ளவுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 இருபதுக்கு 20 மற்றும் 3 ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது.
இதேவேளை, நிகோலஸ் பூரண், அண்ருவ் ரஸ்சல், அகேல் ஹொசைன் மற்றும் சிம்ரோன் ஹெட்மயர் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தத் தொடரிலிருந்து விலகியுள்ளதாக தெரிவித்துள்ளது.
அதன்படி, இருபதுக்கு 20 போட்டித் தொடருக்காக ரொவ்மன் பவல் தலைமையிலான 15 பேர் கொண்ட குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.