இஸ்ரேலிடம் இருந்து ஈரான் பின்வாங்கப்போவதில்லை.
ஈரான் மற்றும் தமது கூட்டணியினர் இஸ்ரேலிடம் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்று ஈரான் உயர்மட்டத் தலைவர் ஆயதொல்ல அலி கமேனி தெரிவித்துள்ளார். லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதல் தொடரும் நிலையில் அவர் நிகழ்த்திய உரை ஒன்றில் இவ்வாறு தெரிவித்தார்.
‘எமது படையினர் சில இரவுகளுக்கு முன்னர் சிறப்பாக செயற்பட்ட நடவடிக்கை முழுமையாக சட்டபூர்வமானது மற்றும் முறையானதாகும்’ என்று டெஹ்ரானில் நிகழ்த்திய உரையில் கமேனி குறிப்பிட்டார்.
இதில் இஸ்ரேல் மீது கடந்த செவ்வாய்க்கிழமை ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல்கள் தொடர்பிலேயே அவர் குறிப்பிட்டுக் கூறினார்.
‘தலைவர்கள் கொல்லப்பட்டாலும் கூட பிராந்தியத்தில் எதிர்ப்புப் போராட்டம் பின்வாங்காது’ என்று கமேனி வலியுறுத்தினார்.