சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஜீப் வாகனம்!
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரி வருமானத்தை புறக்கணித்திருந்த ஜீப் வாகனமொன்றை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கைப்பற்றியுள்ளது.
குறித்த ஜீப் வாகனம் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டு, பயணித்து வந்துள்ளதாக மேற்படி ஆணைக்குழுவின் இரகசிய மற்றும் புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதன்படி, கடந்த மாதம் 18ஆம் திகதிக்கு முன்னர், குறித்த வாகனத்தை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் ஒப்படைக்குமாறு நீதமன்றம் உத்தரவிட்டது.
எனினும், குறித்த உத்தரவை மீறியதன் காரணமாக பதுளை நெலும்கம பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவருக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.
நீதிமன்ற உத்தரவுக்கமைய இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் இரகசிய புலனாய்வுப் பிரிவினர் ஜீப் வாகனத்தை பொறுப்பேற்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர்.