இலங்கை சிறையில் இருந்த 56 பாகிஸ்தானியர்கள் இன்று விடுவிப்பு.
இலங்கையில் பல வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த 56 பாகிஸ்தானியர்கள் இன்று பாகிஸ்தானுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதன்படி, கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் பாதுகாப்பின் கீழ் அந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் அரசாங்கத்தின் பல மாத இராஜதந்திர பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் மத்திய உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, கடந்த மூன்று மாதங்களாக இலங்கை அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி, அவர்களின் விடுதலைக்கான முயற்சிகளை முன்னெடுத்தார்.