முட்டை தொழிலை காப்பாற்ற எடுக்கப்பட்டுள்ள முடிவு.
தற்போதுள்ள மூலப்பொருட்களின் விலையின்படி, ஒரு முட்டையின் விலை 36 முதல் 37 ரூபாய் வரை பராமரிக்கப்படாவிட்டால், அத்தொழில் துறை நலிவடையும் அபாயம் உள்ளதாக விவசாய அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
அந்த அமைச்சின் செயலாளர் எம்.பி.நிஷாந்த விக்கிரமசிங்க இன்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கோழி தீவன விலையை குறைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.அந்த செலவுகள் குறைக்கப்பட்டவுடன் முட்டை ஒன்றை 29 முதல் 30 ரூபாய் வரையிலான விலையில் சந்தைக்கு விநியோகிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“எப்படியும் ஒரு முட்டை உற்பத்தி செய்ய சுமார் 32 முதல் 33 ரூபாய் வரை செலவாகும்.இந்த செலவில் பெரும்பாலானவை கோழி தீவனம் ஆகும். 80% மக்காச்சோளத்தின் விலையைப் பொறுத்தது.
மக்காச்சோளத்தின் விலையை நிர்ணயிப்பதில் சில சிக்கல் நிலைகள் உள்ளன.அதனைத் தீர்க்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளோம்.
எவ்வாறாயினும், சந்தையில் ஒரு முட்டைக்கு 36 முதல் 37 ரூபாய் வரை விலை கிடைக்காமல் போனால், இது கோழிப்பண்ணை தொழிலை பாதிக்கும்.
எதிர்காலத்தில், கோழித் தீவனத்துக்கான உற்பத்திச் செலவு, குறிப்பாக சோளத்தின் விலை சுமார் 165 ஆக உள்ளது.
அதனை 140 ஆக குறைக்கலாம்.அதைச் செய்த பிறகு, நாட்டில் முட்டை விலை 29 முதல் 30 ரூபாய் வரையில் இருக்கும்” என்றார்.