வரி செலுத்தாத நபர்களிடமிருந்து வரிகளை வசூலிக்க நடவடிக்கை!
இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் 1,417 பில்லியன் ரூபாய் வரி வசூலிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அது இந்த வருடத்தில் இலக்கிடப்பட்ட வருமானத்தின் 70 சதவீதமாகும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் வரி செலுத்தாத நபர்களை அடையாளம் கண்டு, அவர்களிடமிருந்து வரிகளை வசூலிப்பதற்கும் எதிர்பார்த்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.