பேருவளையில் பெய்த கடும் மழை காரணமாக வீடுகள் கட்டிடங்களுக்குள் வெள்ள நீர் உட்புகுந்து, பாடசாலைகளும் ஸ்தம்பிதம்.
பேருவளையில் இன்று அதிகாலை 3 மணி முதல் பெய்த தொடர் மழையினால் வீடுகள் கட்டிடங்களுக்குள் வெள்ள நீர் உட்புகுந்துள்ளது.
பாடசாலைகளும் ஸ்தம்பிதம் 🤲பேருவளை சீனங்கோட்டை, அம்பேபிடிய, பன்னில, வத்ஹிமிராஜபுரம், கொரகாதுவ, எலந்தகொட,, மஸ்ஸல போன்ற பிரதேசங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
வழமையாக தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளநீர் பாதிப்புக்கு உள்ளாகி வந்த நிலையில் இம்முறை பல பிரதேசங்களிலும் தொடர் மழையினால் வீடுகள் கட்டிடங்களுக்குள் வெள்ள நீர் உட்புகுந்துள்ளது.
கடந்த நகர சபை தேர்தலில் பேருவளையில் வடிகாலமைப்பு பிரச்சினைகள் தீர்க்கப்படும், இதற்கான தீர்வு திட்டம் வழங்கப்படும் என அப்போதைய நகர சபை தலைவர் வாக்குறுதி அளித்தும் அது நிறைவேற்றப்படவில்லை என பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.