ஐ. நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான வரைவு தீர்மானம் வாக்கெடுப்பின்றி ஐ. நா.மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்கான A/HRC/57/L.1 வரைபு தீர்மானம் ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 57வது வழக்கமான அமர்வின் போது வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.