வெங்காயத்திற்கு அரசாங்கம் விதித்த வரி – குற்றம் சுமத்தும் விவசாயிகள்!
உள்நாட்டு வெங்காய உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் வகையில் இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்திற்கு அரசாங்கம் வரி விதித்துள்ள போதிலும், அதன் பலன் இடைத்தரகர்கள் மற்றும் வர்த்தகர்களையே சென்றடைவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
உள்நாட்டு வெங்காய உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலையை வழங்குவதற்காக, இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்திற்கு அரசாங்கம் 20 ரூபா வரி விதித்ததையடுத்து, ஒரு கிலோகிராம் வெங்காயத்தின் விற்பனை விலை 180 முதல் 230 ரூபா வரை காணப்படுகிறது.
எனினும், சந்தையில் தங்களின் விளைச்சலுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
வரி அதிகரிப்பினை இடைத்தரகர்களும் வெங்காயத்தை இறக்குமதி செய்யும் வர்த்தகர்களுமே சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.