கொழும்பில் அதிக மழைவீழ்ச்சி
கடந்த 12 மணித்தியாலங்களில் கொழும்பு மாவட்டத்தில் அதிகளவிலான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டவியல் திணைக்களம் நேற்று இரவு தெரிவித்தது.
அதன்படி, கொழும்பு மாவட்டத்தின் ஹங்வெல்ல பகுதியில் 141.5 மில்லி மீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அத்துடன், களுத்துறை மாவட்டத்தின் வொகன் தோட்டத்தில் 105.5 மில்லி மீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
களுத்துறை மாவட்டத்தின் ஹல்வத்துர தோட்டத்தில் 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும், ஹொரணையில் 98 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் 150 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.