மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்!
புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி முதல் ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், கொழும்பிலிருந்து காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பகுதிகள் கொந்தளிப்பாகக் காணப்படும்.
எனவே, மறு அறிவித்தல் வரை கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழிலாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.