ஓமந்தை வாள்வெட்டு சம்பவம் – மற்றுமொருவர் பலி!
வவுனியா – ஓமந்தை கதிரவேலு பூவரசன்குளம் பகுதியில் நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மற்றுமொருவரும் உயிரிழந்தார்.
காணி பிணக்கு காரணமாக நேற்று முன்தினம் இந்த வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது 38 வயதான ஒருவர் உயிரிழந்ததுடன் 48 வயதான ஒருவர் காயமடைந்தார்.
இந்தநிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்ததாக ஓமந்தை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறிலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.