ரயில் இயந்திரத்தில் தீப்பரவல்
களுத்துறையில் இருந்து மருதானைக்கு இயக்கப்படவிருந்த ரயிலின் இயந்திரத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
களுத்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் வைத்து இவ்வாறு தீ விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக கரையோர ரயில் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.. இன்று (15) காலை 7 மணியளவில் களுத்துறையில் இருந்து பயணிக்க ஆரம்பித்த ரயில் களுத்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் தீப்பிடித்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயிலின் பின் இயந்திரத்தில் தீ பரவியதையடுத்து களுத்துறை மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவினர் தீயை அணைத்துள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும், ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், குறித்த ரயிலில் இருந்த பயணிகள் மற்றுமொரு ரயில் மூலம் மருதானைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக கரையோர மார்க்கத்தில் சிறிது ரயில் தாமதம் ஏற்படும் எனவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.