உள்நாடு

இலங்கையில் ஆபத்தாக மாறிவரும் scam camp!

இலங்கையில் வெளிநாட்டவர்களால் நடத்தப்படும் இணையதள மோசடி குழுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Derana BIG FOCUS நிகழ்ச்சியில் இன்று இணைந்துகொண்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவா இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர்,”நாங்கள் இங்கே ஒரு தனித்துவமான சூழ்நிலையை அனுபவித்தோம்.ஸ்கேனிங் முகாம். இவை முகாம்களாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இது இலங்கைக்கு ஒரு புதிய போக்கு. 2024ஆம் ஆண்டு தான் இந்த முகாமின் நிலை தெரியவந்தது.

இந்த முகாமில் என்ன நடக்கிறது என்றால், அவர்கள் ஒரு தனி இடத்தை தேர்வு செய்கிறார்கள், அவர்களுக்கு அறை வசதியுடன் கூடிய விசாலமான இடம் தேவை.

இவர்கள் வெளியே செல்ல அனுமதி இல்லை. இலங்கையர்கள் மியான்மரில் சிக்கியுள்ளனர் என்றால் அதே நிலைதான் இங்கும் நிலவுகிறது” என்றார்.

இணையவழி மோடி தொடர்பில் சுமார் 300 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், 500 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 300 கணினிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இணையவழி மோசடியை மேற்கொள்ளும் நபர்களுக்காக இடங்களை வழங்குபவர்களுக்கு எதிராக குற்றவியல் வழக்குகள் தாக்கல் செய்ய முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *