காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!
நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை எதிர்வரும் தினங்களில் குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் பல இடங்களிலும் இன்று (16) மழை பெய்யக்கூடும்.
வடமாகாணத்தில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், சில இடங்களில் 50மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.