றுவர் இல்லம் ஒன்றில் பணிபுரிந்த காவலாளி கழுத்து வெட்டப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவத்தில் இரு சிறுவர்கள் கைது
கொழும்பு, பொரலஸ்கமுவ பிரதேசத்தில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் பணிபுரிந்த காவலாளி ஒருவர் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.
அலுபோமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 80 வயதுடைய முதியவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் அதிகாரிகள் சிலர், திருட்டு சம்பவம் ஒன்று தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக பொரலஸ்கமுவ பிரதேசத்திற்கு நேற்று செவ்வாய்க்கிழமை (15) சென்றிருந்தபோது சிறுவர் இல்லத்தில் உள்ள கிணற்றிற்கு அருகில் வைத்து காவலாளியின் சடலத்தை கண்டுபிடித்துள்ளனர்.
காவலாளி உறங்கிக் கொண்டிருந்தபோது இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த கொலை சம்பவம் தொடர்பில், 16 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரலஸ்கமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.