கெஹெலிய ரம்புக்வெல்ல மாதிரி ஆரம்ப பாடசாலையின் பெயர் மாற்றம்.
கண்டி – வத்தேகம வலயக் கல்வி பணிமனைக்கு உட்பட்ட குண்டசாலை கெஹெலிய ரம்புக்வெல்ல மாதிரி ஆரம்ப பாடசாலையின் பெயரை மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மாகாண கல்வித் திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர், பேராசிரியர் S.B.S.அபயகோன் தெரிவித்தார்.அதற்கமைய, குறித்த பாடசாலை எதிர்வரும் காலத்தில் குண்டசாலை ரோயல் ஆரம்ப பாடசாலை என அழைக்கப்படவுள்ளது.