முன்னாள் ஜனாதிபதியின் விசேட உரை!
நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்த்து முன்னோக்கிச் செல்வதற்குத் தன்னுடன் இருந்த அனுபவமிக்கவர்கள் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு மால் வீதியிலுள்ள புதிய ஜனநாயக முன்னணியின் அலுவலகத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்திய அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தனது வெளிநாட்டுக் கடனைச் செலுத்தத் தொடங்கும் 2027ஆம் ஆண்டுக்குள் அரச வருமானத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15% ஆக்கும் சவாலைப் புதிய அரசாங்கம் எதிர்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அந்த இலக்கை அடைவதற்கு ஒவ்வொரு வருடமும் ஒரு சதவீதப் பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டும்.
பொறுப்புகளிலிருந்து தட்டிக்கழிக்காத அனுபவம் வாய்ந்த அணிதான் அடுத்த நாடாளுமன்றத்திற்குத் தேவை என்றும் வலியுறுத்தினார்.
பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து நாட்டை மீட்டெடுக்கத் தன்னுடன் இணைந்து செயற்பட்ட குழுவினர் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.
அந்தக் குழு வெற்றி பெற வேண்டும் என்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.