வலது கை விரலில் அடையாளம்.
எதிர்வரும் 26 ஆம் திகதி எல்பிட்டிய பிரதேசசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஆணைக்குழு அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்காளர்கள் வாக்களித்ததை உறுதிப்படுத்துவதற்காக இடது கை சிறு விரலில் அடையாளப்படுத்தப்பட்டது.
எனினும் அந்தக் குறியீடு இன்னும் அந்த விரலில் உள்ளமையினால் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் (262 ஆம் அத்தியாயம்) 53அ (3) ஆம் பிரிவின் பிரகாரம், 26ஆம் திகதி நடைபெறவுள்ள எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலின் போது வாக்காளரின் இடது கைப் பெருவிரலில் அடையாளமிடப்படும்.
வாக்காளரின் இடது கையில் பெருவிரல் இல்லாதிருக்கும் பட்சத்தில், அவரது வலது கையில் உள்ள வேறேதெனுமொரு விரலில் அடையாளமிடப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்.