ஒரு முட்டையை 35 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் – இதற்கு விலை சூத்திரம் கொண்டு வரப்பட வேண்டும் என முட்டை வர்த்தக சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுப்பு.
முட்டை விலையை நிர்ணயம் செய்ய விலை சூத்திரம் கொண்டு வர வேண்டும் என முட்டை வர்த்தக சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.
ஒரு முட்டையை உற்பத்தி செய்வதற்கு 25 ரூபாவிற்கும் குறைவாகவே செலவாகும் என்பதால் சந்தையில் ஒரு முட்டையை 35 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் செயலாளர் அனுர மாரசிங்க தெரிவித்தார்.
முட்டை விலை தொடர்பான நெருக்கடி இன்னும் தீரவில்லை. சந்தையில் முட்டை விலை 40-45 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக குழுவை நியமித்து விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்துங்கள் என கோரிக்கை விடுத்துள்ளனர்.